ஒரு சிறு வழிகாட்டி
நெசவை அறிவோம்
எந்தப் புடவை எந்த நேரத்திற்கு, எப்படிப் பராமரிப்பது. கடையில் வாடிக்கையாளர்களிடம் சொல்வதையே இங்கே எழுதியிருக்கிறோம்.

01
செட்டிநாடு காட்டன் (கண்டாங்கி)
நம் ஊரின் சொந்தப் புடவை. உறுதியான, காற்றோட்டமான பருத்தியில் கட்டங்கள், கோடுகள், புடவையின் மூன்றில் ஒரு பங்கு வரை இருக்கும் அகலமான மாறுபட்ட பார்டர். காரைக்குடி பகுதியின் கண்டாங்கி நெசவுக்கு 2019-ல் புவிசார் குறியீடு (GI) கிடைத்தது.
எப்போது அணியலாம்: அன்றாடம், அலுவலகம், கோயில். நாள் முழுவதும் வடிவம் மாறாது.
பராமரிப்பு: குளிர்ந்த நீரில் கையால் துவைக்கவும்; ஒவ்வொரு முறையும் மென்மையாகும். லேசான கஞ்சி போட்டால் மடிப்பு அழகாக இருக்கும்.
இந்தப் புடவைகளைப் பாருங்கள்